Sunday, April 29, 2018

On Sunday, April 29, 2018 by Tamilnewstv   
திருச்சி 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட  மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீரங்கம் என்றாலே மிகவும் பிரசித்தி பெற்ற ரெங்கநாத ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது அதில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது என்பது பெருமை சேர்க்கிறது கும்பாபிஷேகம் என்றால் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உற்சவம் ஆகும் அதேபோன்று மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஓமம் மற்றும் சிறப்பு பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் காளியம்மன் அருள் பெற்றனர் இந்த தளம் ஸ்ரீரங்கத்தில் பெருமை சேர்க்கக்கூடிய தலமாக மக்கள் கருதுகின்றனர்

 இத்தலத்தில் பூஜைகள் செய்வதன் மூலம் பக்தர்களின் பில்லி சூனியம் ஏவல் போன்ற பிரச்சினைகள் அகலும் என்பதால் ஏராளமான பக்தர்கள் மகா காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக மகா காளியம்மன் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேகம் பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது கும்பாபிஷேகம் முன்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்து பின்னர் ஓம கலசங்களை கும்பாபிஷேகத்திற்கு எடுத்துச் சென்று மேலே காணும் கும்பத்திற்கு அபிஷேக நீர் ஊற்றப்படுகிறது இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அவர்களுடைய குறைகள் தீர்ந்து நம்மை காணப்படுவதால் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

0 comments: