Sunday, May 13, 2018

On Sunday, May 13, 2018 by Tamilnewstv   
திருச்சி.13.05.18.

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் தேர்த்திருவிழா இம்மாதம் 5 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு  சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளிய பின்னர் இரவு 9 மணியளவில் கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இன்று அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு தேர்மண்டபத்தை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என நம்பெருமாளின் நாமத்தை விண்ணதிர முழங்கி தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

0 comments: