Thursday, May 17, 2018

On Thursday, May 17, 2018 by Tamilnewstv in ,    
மலேசியா தலைநகர் கோலாம்பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் இன்று மதியம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் டோர் மெட்டல் டிடெக்டர் கருவியை தாண்டி செல்லும் போது பீப் சத்தம் ஒலித்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் (35) என்பவர் ரூ. 3.71 லட்சம் மதிப்பிலான 120 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

இதே போல் இலங்கை தலைநகர் கொலும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த விருத்தாசலம் அன்பரசன் (29) என்பவர் ரூ.3.55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த போது சிக்கினார்.

கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: