Tuesday, June 05, 2018

On Tuesday, June 05, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி       5.6.18

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி                      



ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும்.

திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வனத்துறையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் இராசாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கி அரசு மருத்துவமனை வழியாக பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது.

விவசாயம், நீர் மேலாண்மை, மீன் பிடி தொழில் போன்றவற்றில் செயற்கை முறைகளை தவிர்ப்பது, ஆற்றல் தேவைகளுக்கான மாற்று வழிகளை கண்டறிவது மட்டுமே வருங்காலத்தில் சுற்றுபுறத்தை பாதுகாக்க வழிவகுக்கும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிமனிதர்களின் தாக்கம் அதிகம் என்பதால், பள்ளி பருவத்திலேயே இதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், பேரணியில் தலைமை வனப்பாதுகாவலர் யோகேஷ் சிங் IFS, மாவட்ட வன அலுவலர் சுஜாதா, உதவி வனப்பாதுகாவலர் சம்பத் குமார், முதன்மை கல்வி அலுவலர் இராமகிருஷ்ணன், பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் ரில்டன், மருத்துவ கல்லூரி முதல்வர் அனிதா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: