Saturday, November 17, 2018

On Saturday, November 17, 2018 by Tamilnewstv   
திருச்சி ஆண்டவன் கல்லூரியில் இளம் அறிவியலாளருக்கான இன்ஸ்பையர் பயிற்சி முகாம்.

ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத் துறை ஆதரவுடன் இன்ஸ்பையர் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் ஐந்து நாட்கள் முகாம்  அறிவியலாளர்களை உருவாக்கும் விதமாக நடைபெறுகிறது. முகாமில் பெங்களுர் இந்திய அறிவியல் நிறுவனம், சென்னை இந்திய தொழிற் நுட்பத் துறை, மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கிறார்கள். துவக்க விழாவில் கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி தலைமை வகிக்க பத்மஸ்ரீ முனைவர் வாசுதேவன் முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி இயக்குனர் ராமானுஜம், முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பிச்சை மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயிர் அறிவியல் துறை கல்விப் புல முதன்மையர் ஜோதி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

0 comments: