Sunday, December 23, 2018

On Sunday, December 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்…

இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான  33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை  ஜெய் பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.

ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் நாலு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் தரைவழியாக வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றன.  பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சாகச பயணம் கடந்த 6-ம்தேதி காஷ்மீர் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய  நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி போபால் திருப்பதி சென்னை காஞ்சிபுரம், விழுப்பும், பெரம்பலூர் வழியாக திருச்சி வந்தடைந்தார்கள்.

இந்த சாகசப் பயணத்தில் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதற்காக விளையாட்டரங்கம் பாதுகாப்புடன் தயாராக இருந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 comments: