Tuesday, March 26, 2019

On Tuesday, March 26, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
செம்பட்டு:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது 4 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் ஆசனவாயில் மறைத்து இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 49.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் செய்து மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலி கான், காஜா, மற்றும் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: