Tuesday, March 26, 2019

On Tuesday, March 26, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி மார்ச் 26

தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தற்போது  நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 721-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 626 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை  காங்கிரஸ், தேமுதிக, மநிம கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் இரண்டு நபர்ள் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 257 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 212 ஆண்களும், 45 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட உள்ளன

திருச்சியில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சாருபால தொண்டைமான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான  சிவராசுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்,மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்

அமமுக திருச்சி தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேட்டியில் கூறுகையில்


டிடிவி தினகரன் தான் எங்களது வெற்றி சின்னம்

அம்மா அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் நான். திருச்சி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டுள்ளேன். திருச்சி புதிதல்ல. மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். பெரிய அளவில் வெற்றி பெறுவேன். சின்னம் குறித்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் முழுவதும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். எங்களது வெற்றி சின்னமே டிடிவி தினகரன் தான். எங்களது வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்றார்

0 comments: