Saturday, October 05, 2019

On Saturday, October 05, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி
05.10.2019

திருச்சியில்பிஜேபி  மாநில பொதுச் செயலாளர்
திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு பதிலடி   



மகாத்மா காந்தி அவர்களின் 150 பிறந்த தின விழா முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை அக்டோபர் 2 முதல் 30 வரை தமிழகமெங்கும் நடைபெறுகிறது,
அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சியில்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  
காந்தி சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்
திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருச்சி
அரசு மருத்துவமனை அருகில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் அஸ்தி மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி துவக்கி வைத்தார்
நிகழ்ச்சியானது திருச்சி புத்தூர் நால்ரோடு வழியாக, உறையூர் ராமர் மடம் வரை நடைபயண யாத்திரை நடைபெற்றது.
பாதயாத்திரையில்
தூய்மை பேணுவோம்,
கதர் ஆடை அணிவோம்,
மரங்களை நடுவோம், 
பிளாஸ்டிக் ஒழிப்போம்,
நீர் ஆதாரம் காப்போம்,
மதுவை ஒழிப்போம்,பெண்கள் நலம் காப்போம்,சமூக ஒற்றுமை வளர்த்திடுவோம் இயற்கை வேளாண்மையை,
சுதேசி பொருட்களை ஆதரிப்போம், மேம்படுத்துவோம்,போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருச்சி மாவட்ட பிஜேபி கட்சியின் தலைவர் தங்கராஜன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் கௌதம்,மாவட்ட செயலாளர் காலி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கூறுகையில்.



காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொய் வழக்கு அல்ல நாட்டில் நெருக்கடி நிலை கொண்டு வந்தவர்கள். ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி ஒன்று இந்த நாட்டில் இருக்க முடியுமென்றால் அது காங்கிரஸ் கட்சிதான். 
தயவுசெய்து கார்த்தி சிதம்பரம் அவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய வரலாற்றை படிக்க வேண்டும். அன்று மகாத்மா, பட்டேல் அவர்கள் இருந்த காங்கிரஸ் வேறு இன்று ஊழல் வழக்குகளில் உள்ளே சென்று இருப்பவர்கள் காங்கிரஸ் வேறு,
அத்துடன் விசாரணை எப்போது முடிவடையும்
கோர்ட்ல வந்து தாக்கல் பண்றதெல்லாம் அந்த அமைப்புக்கு தெரியும் ஒவ்வொரு வழக்கையும் விசாரணை செய்து கொண்டும் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறார்கள் அதனால் அவருடைய விருப்பத்திற்கு சிபிஐ என்றும் நடக்காது என்று கூறினார்.

0 comments: