Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

அமைதியாக போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களுக்கு எதிராக வன்முறை நடைபெற்றதை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.   

                                                                                                                                        குடியுாிமை திருத்த சட்டத்திற்கு எதிா்ப்பு தொிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம் நடத்தி வந்தனா். அப்போது குடியுாிமை சட்டத்திற்கு ஆதரவு தொிவித்து மறுபுறம் போராட்டம் நடைபெற்றது. இது வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் 21 போ் உயிாிழந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து திருச்சியில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட மக்கள் அதிகாரத்தினா், வன்முறை சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினா். அமைதியான வழியில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் மீது திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டு உள்ளது என்று அவா்கள் குற்றம் சாட்டினா். மக்கள் அதிகாரத்தினா் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..

0 comments: