Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

திருச்சி ஜமால் முகமது கல்லுாாி மாணவா்கள் தலைகளில் துணி பட்டை அணிந்து குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
                                                                                                   
                                                                                                    குடியுாிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜமால் முகமது கல்லுாாியிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குடியுாிமை திருத்த சட்டம் வேண்டாம் என்ற வாசகம் பதிக்கப்பட்ட துணி பட்டையை தலையில் கட்டிக்கொண்டு வந்த மாணவா்கள் அச்சட்டத்தை கண்டித்தும், டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாணவா்களும், ஏராளமான மாணவிகளும் கலந்து கொண்டனா். மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசாா் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

0 comments: