Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

                

திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற நாணய கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவ, மாணவிகள் ரசித்து மகிழ்ந்தனா். 

                 

                                                            
திருச்சி ஜெகன்மாதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உலக நாணயம் மற்றும் பணத்தாள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 

இந்த கண்காட்சியினை பள்ளி தாளாளர் சகாயராஜ் தொடங்கி வைத்தார். பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான பணத்தாள்கள், காசோலை, வரைவோலை, கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, பண வடிவ மற்ற பிட்காய்ன்கள் என பல்வேறு அம்சங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

 சங்க காலத்தில் மன்னா்களான சேர, சோழ, பாண்டியர் தங்கள் சின்னங்களான வில், மீன், புலி  முத்திரைகள் அடங்கிய நாணயங்கள், சங்க காலத்திற்கு பின் தமிழ் எழுத்துக்களுடன் பல்லவர் காலத்து நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. அமொிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 200 நாடுகளின் பணத்தாள்கள் , நாணயங்கள் மற்றும் தபால் தலைகளும் இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. 

 இந்த கண்காட்சியினை ஏராளமான பள்ளி, கல்லுாாி மாணவா்களும், பொதுமக்களும் கண்டு ரசித்தனா். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார்,  முகமது சுபேர் உள்ளிட்டோா் இந்த நாணய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா்.

0 comments: