Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி 27.02.2020

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் இன்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 
                                                                                                 
                                                               தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில், அச்சங்கத்தின் மாநில பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற 


இந்த ஆா்ப்பாட்டத்தில், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்,உயாி பணியாளா்களை இதர அரசு பணியிடங்களில் பணி அமா்த்திட வேண்டும், முறையற்ற ஆய்வுகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாநில தலைவா் சிவக்குமாா், மாநில செயலாளா்கள் முருகானந்தம், கோவிந்தராஜன், இளங்கோவன், கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலா் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.

0 comments: