Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    

                   

ஆளுங்கட்சிக்கு விளம்பரம் செய்யும்  எதிர்க்கட்சி அதன் ரகசியம் என்ன?


ஜாமீன் வாங்க பலகோடி ரூபாய் பணத்துடன் அலையும் எல்பின் சகோதரர்கள்.



தஞ்சையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கைதானவர் பிரசன்ன வெங்கடேஷ். 

                    
இவர் தந்த ரகசிய வாக்குமூலம் நேற்று முன்தினம் கைதானவர் கிங்ஸ்லி. கிங்ஸ்லி மூலமும் பல்வேறு தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துவிடும் என்பதால் முதல்கட்டமாக பிரசன்ன வெங்கடேசை ஜாமினில் வெளியே எடுக்க ஒரு பலகோடி ரூபாய் பணத்துடன்  முக்கிய ஆளும் கட்சி  மூத்த  தலைமை வழக்கறிஞரிடம்ஆலோசனை கேட்டும் சிபாரிசு செய்யக்கோரி வருகிறார்களாம். 

                           
இதைத்தொடர்ந்து கிங்ஸ்லி ஜாமீனுக்கு எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என கூறி வருகிறார்களாம் எல்பின் சகோதரர்கள். 


(இவர்கள் மீது திருச்சி குற்றப் பொருளாதார பிரிவு 1/19 வழக்கு தொடர்ந்த போது கோடிக்கணக்கில் செலவு செய்து ஜாமீன் பெற்றவர்கள் என்பதும் ஜாமின் முன்பணமாக கோடிக்கணக்கில் பிணைத்தொகை கட்டியதும் குறிப்பிடத்தக்கது)


தஞ்சை காவல்துறையினரால் தேடப்படும் சத்யபிரியா எல்பின்நிறுவனத்தின் உள்ள காவல்துறை நெருங்க முடியாத அளவிற்கு ஒரு VVIP பாதுகாப்பில் உள்ளதாகவும் சத்யபிரியா கைது நடவடிக்கை தடுக்க ஆளுங்கட்சி 
விஐபியிடம் பேரம் பேசப்படுவதாகவும் அவர்களுடைய எல்பின் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்
                    


 இத்தனை கோடி செலவு செய்வதற்கு காரணம் தங்களின் ரகசியம் வெளியில் கசிந்து விடக்கூடாது காவல்துறையை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே காரணம். ஜாமினில் வெளியில் வந்தாலும் பிரசன்னா மற்றும் கிங்ஸ்லி ஆகிய இருவர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என தெரிகிறது.

கோடிக்கணக்கில் பணம் செலவழித்து காவல் துறையினரை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்து செயல்பட்டு வருகின்றனர் எல்,பின் சகோதரர்கள் அழகர்சாமி  என்கிற ராஜா மற்றும் ரமேஷ் குமார்  என்கிற ரமேஷ்.

இவர்களின் நினைப்பு நிறைவேறுமா ? அல்லது காவல்துறையினர் செயல்பாடு வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.






பின்குறிப்பு :-

 *ELFIN நிதி நிறுவன சகோதரர்கள் பல அடியாட்கள் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மாதாமாதம் பணம் கொடுத்து உதவி வருவதாகவும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் எல்பின்  நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிடுவோர்  மீதும் அதற்கு உறுதுணையாக இருக்கும் நபர்கள் மீதும் ராமஜெயம் கொலை வழக்கு போன்று ஆகிவிடும் என்று அவர்கள் சுற்றுவட்டாரத்தில் கூறி வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*


 *தொடர்ச்சியாக ELFIN செய்தி வெளியிட்டதால் மர்ம நபர்களால் ( சபரிநாதன் என்ற நான் )தாக்கப்பட்டேன் ஆனால் இதுநாள் வரை காவல்துறை அதிகாரிகள் தாக்கிய மர்ம நபர்களை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது பொதுநலன் கருதி செய்தி வெளியிடுவோர் மீது இப்படி தாக்குதல் நடத்தினால் மக்களின் நிலை என்ன ஆவது*


0 comments: