Thursday, February 27, 2020

On Thursday, February 27, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி
                 

டில்லியில் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வன்முறை உள்ளிட்ட அசம்பவங்களை தவிர்த்திருக்கலாம். நீதிமன்ற நீதிபதிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். மத்திய அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். குண்டர்களையும்  ராணுவம்,  போலீசையும் வைத்து எந்த போராட்டத்தையும் அரசு ஒடுக்கி விட முடியாது.

                 

சட்டம் என்பது சாதி மதம் மொழி இவற்றின் அடிப்படையில்  இல்லாமல் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் கூடிய வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் மக்களை நாடற்றவர்களாக மாற்றுவது கூடாது. இத்தகைய அச்சத்தால் தான் மக்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருக்கக்கூடிய சட்டம்தான் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால் எதற்காக திருத்த சட்டம் கொண்டு வந்தார்கள். புது சட்ட வடிவில் பிரச்சனை இருக்கிறது என்பதைத்தான் மக்கள் போராட்டம் காட்டுகிறது. மக்களை தூண்டிவிட்டு யாரும் போராட வைக்க முடியாது. மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.

 திமுக சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்  மக்களுக்காக குரல் கொடுத்து வந்த திறமையான சட்டமன்ற உறுப்பினர். நல்ல மனிதர் .

உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்களில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் 65 விழுக்காடு தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது இத்தேர்தலை நடத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி மக்களுக்கு சென்று சேரும்.

 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் இடம் கேட்கிறதா?  திமுக கொடுக்கிறதா? என்பதெல்லாம் தெரியாது. அது இரு கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று. அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

 மக்களுக்கு பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் பணிகள் நிறைய கிடைக்கின்றன.வளர்ச்சி நிதி  5 கோடியைக்கொண்டு  மக்களை திருப்திப்படுத்த முடியாது. அந்த நிதியை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் அல்லது அந்த நிதியை நீக்கிவிட வேண்டும். வளர்ச்சி நிதியை கொண்டு தான் மக்களுக்கு ஒரு சில நன்மைகளை செய்ய முடிகிறது. என  பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டி

0 comments: