Friday, February 28, 2020

On Friday, February 28, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜேசிபி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடக்க விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

 இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் இச்சங்கம் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திரங்களுக்கு வாடகை குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் சங்க உறுப்பினர்கள், காண்ட்ராக்டர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு உரிமையாளர்கள் எந்திரங்களுகாண கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். 


இந்த குறையை தீர்க்கும் வகையில் இச்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் இனி குறைந்த வாடகைக்கு ஜேசிபி எந்திரங்களை பயன்படுத்த கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு 2,500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என சங்கத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு மேல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா 900 ரூபாய் வாடகை என்ற அடிப்படையில் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஜேசிபி எந்திர தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. இந்த தொழிலை காப்பாற்றுவதற்காகவும், உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் இந்த வாடகை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
 எனவே ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

பேட்டி: மனோகரன். திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர் சங்க ஆலோசகர்.

0 comments: