Friday, March 20, 2020

On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி சட்டத்திற்கு புறம்பாக பைக் டாக்சி நடவடிக்கைக்கோரி சிஐடியு போலீசில் மனு

தனிநபருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தி பைக் டாக்சி என்ற பெயரில் பயணிகளை ஏற்றி செல்லுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். தனிநபர் வாகனத்தை வாடகை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த கூடாது என்ற நீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சிஐடியு ஆட்டோ ரிக்~h ஓட்டுனர் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஆர்டிஓ அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்  ஒரு தனியார் நிறுவனம் இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் தங்கள் வாகனத்தை பைக் டாக்சி நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டால் இலவசமாக இன்சூரன்ஸ் மற்றும் தலைகவசம் வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து புதனன்று பைக் டாக்சிக்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதனை கண்டித்தும் இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் சிஐடியு ஆட்டோ ரிக்~h ஒட்டுனர் சங்கம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர்  சந்திரன் மாவட்ட பொருளாளர் அன்பு செல்வம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால்  ஆகியோர் உறையூர் காவல் நிலையத்தில் புதனன்று புகார் அளித்தனர்.
பின்னர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களையும் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.  பேட்டியின் போது மாவட்ட நிர்வாகிகள் கிரேசி, ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: