Friday, March 20, 2020

On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ரயில்வே எஸ்.பி. செந்தில்குமார் இன்று ஆய்வு செய்தார்.


இப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு ரயில்வே காவல் துறையும் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரயில்வே காவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளை பரிசோதனை செய்வது, கை கழுவுவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
 இதையடுத்து திருச்சி ரயில்வே மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் ரயில்வே காவலர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். திருச்சி ரயில்வே மாவட்டத்தில் கேரளா எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் 10 தெர்மல் ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



திருச்சியில் இன்று ஓடும் ரயில்களில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வரை யாருக்கும் எவ்வித நோய் அறிகுறியும் தென்படவில்லை. திருச்சி ரயில் நிலையத்தில் ஒரு ஆம்புலன்சும், ஒரு மருத்துவர்  தலைமையிலான மருத்துவ குழு தயாராக உள்ளது. அறிகுறி இருக்கும் பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
 ஒரு காவல் ஆய்வாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஆறு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறை குழு மூன்று ஷிப்டுகளில் சுழற்சிமுறையில் வழக்கமான பணியை தவிர்த்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பணம் வங்கிக் கணக்கிற்கு சென்று விடும். அதனால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

0 comments: