Saturday, March 28, 2020
On Saturday, March 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் மீது கொரோனா ஆய்வு நடத்த வலியுறுத்தல்
https://tamilnadunewstv.blogspot.com/2020/03/blog-post_52.html
24.3.2020 (தொடர்ச்சி)
திருச்சி: துபாய் சென்று திரும்பிய எல்பின் சகோதரர்கள் அரசு விதிமுறைகளை மீறி அன்னதானம் வழங்கியதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு போலி நிறுவனம் எல்பின் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் சிறந்த முறையில் வணிகம் செய்த 400 பேர் துபாய் சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்நிறுவனத்தின் சார்பில் செயல்படும் அறம் மக்கள் நல சங்க தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோரது தலைமையில் பல்வேறு குழுக்களாக பிரிந்து மார்ச் மூன்றாம் தேதி முதல் துபாய் சென்றனர்.
கொச்சின், திருவனந்தபுரம், மும்பை, சென்னை விமான நிலையங்கள் வழியாக இவர்கள் பயணம் செய்தனர்.
மார்ச் 3ஆம் தேதி முதல் சுமார் ஒரு வார காலம் துபாயில் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு அதே வழித்தடத்தில் நாடு திரும்பினர்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் தாக்க தொடங்கியது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக தான் இந்த நோய் இந்தியாவிற்குள் நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி இருக்க அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு தங்கியிருக்கும் வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு தாக்குதலை கட்டுப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த அறம் மக்கள் நல சங்கம் சார்பில் துபாய் சுற்றுலா சென்று வந்தவர்கள் கண்காணிக்க படவில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.
அவர்களும் தாமாக முன்வந்து எவ்வித பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை. அவர்கள் வீடுகளிலும் தங்கியிருக்க அறிவுறுத்தப் படவில்லை.
மேலும் இந்த அமைப்பினர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
அன்னதானம் நிகழ்ச்சியிலும் கையுறை, முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார் அரசுக்கு சென்றவுடன் அன்னதானம் வழங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பினரும் அன்னதானம் வழங்குவதை நிறுத்திக் கொண்டனர். ஆனால் வீட்டினுள்ளேயே இருக்காமல் வெளியில் நடமாடியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து இவர்கள் 400 பேரையும் அடையாளம் கண்டு வீட்டிலேயே இருக்க தற்போது உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து அவர்கள் மருத்துவர் துறையினரின் கண்காணிப்பில் வீட்டில் தங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் இத்தனை நாட்கள் பலருடன் பழகி, தெருக்களிலும் நடமாடி உள்ளனர். மாவட்ட ஆட்சியருக்கு தாமதமாக புகார் சென்றாலும், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
மேலும் இவ்வாறு வெளிநாடு சென்று திரும்பியவர்கள் விதியை மீறி நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தவகையில் இந்த 400 பேரது பாஸ்போர்ட்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இது பலருக்கும் முன்னுதாரணமாக அமையும் என்றும் சமூக ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மருத்துவ கண்காணிப்பில் வைத்ததற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு துறை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment