Saturday, March 21, 2020
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோனா வைரஸ் நோய் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.
இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்களிலும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்கம், மால்கள், ஜவுளிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை இன்று 20ம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில் எந்தெந்த கோவில்கள் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகியவை 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
இந்த வகையில் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். ஆனால் பக்தர்கள் தரிசனம் கிடையாது என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் பக்தர்கள் அருகில் உள்ள இதர கோவில்களுக்கு சென்றனர். ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் பூட்டப்பட்டிருந்தது. முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக கோவில்கள் மூடப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் முன்கூட்டியே அறிவித்து இருந்ததால் கோவில்களுக்கு வந்திருக்க மாட்டோம் என்று பக்தர்கள் புலம்பிக் கொண்டு சென்றனர்.
இந்த வகையில் திருச்சியில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில், உறையூர் நாச்சியார் கோவில், திருவானைக்காவல், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் உள்பட அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய கோவில்களும் இன்று காலை முதல் மூடப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment