Saturday, March 21, 2020
On Saturday, March 21, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் வருகை தந்த வெளிநாட்டு பயணிகள் 3,400 பேருக்கு மருத்துவ குழுவினரால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 191 பேருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறி இருந்ததால் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கள்ளிக்குடி கொரோனா பிரத்யேக சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வகையில் நேற்று துபாய், சார்ஜாவில் இருந்து வந்த 428 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு சளி காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கள்ளிக்குடி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 191 பேரும் தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மருத்துவ குழுவினர் தடுப்பு நடவடிக்கையில் பாராட்டுக்குரிய வகையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்ற சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு வாகனங்கள் உள்பட அரசுப் பேருந்துகளும் நாளை நிறுத்தப்படும். காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய வாகனங்கள் மட்டும் செல்ல தடை கிடையாது. பொதுமக்கள் சாலையில் தேவையற்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்தியாவசிய சிகிச்சை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம். மருத்துவமனை, பொது இடங்களில் நாளை கூடுவதை தவிர்க்க வேண்டும். காவல்துறையினர், மருத்துவக் குழுவினர் நாளை பணியில் இருப்பார்கள்.
ஏற்கனவே கொரோனா ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும் மையம் இந்தியாவிலேயே புனேயில் மட்டும்தான் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஐந்து இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 அமைக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதில் ஒன்று திருச்சி அரசு மருத்துவமனையில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கைகழுவும் விழிப்புணர்வு அதிக அளவில் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களிடம் இது சற்று குறைவாக உள்ளது. மகளிர் சுய உதவி குழு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரவி மக்களை பீதி அடைய செய்யக் கூடாது. அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment