Friday, March 20, 2020

On Friday, March 20, 2020 by Tamilnewstv in    
மக்கள் சமூகநீதிப் பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தன் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
 கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அண்ணன் தம்பி போல் இரண்டு கட்சிகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளன. அரசியலில் மாற்றம் வேண்டும் என்று தமிழக இளைஞர்களும், பெண்களும் விரும்புகின்றனர்.

மாற்று தலைவர் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சி அளிக்க ரஜினி முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 25 மாவட்டங்களில் ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம். தற்போது நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. எங்களது கொள்கையும் ரஜினியின் கொள்கையும் ஒன்றாக உள்ளது. ஊழல் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு மூலம் விவசாயிகள் மேம்பாடு போன்ற அவரது கொள்கைகள் வரவேற்கத்தக்கதாகும் என்றார்.

0 comments: