Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
தொட்டியத்தில் 144 தடை உத்தரவினால்  வாழை தோப்பில்  அழுகி வீணாகும் வாழை பழங்கள் -
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.


திருச்சி மாவட்டம், தொட்டியம்  காவிரி கரையோர  பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.


தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால்  வாழைதார்கள்   தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு  கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும்  வைட்டமின்  சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

0 comments: