Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வீரமஞ்சன்பட்டி வனப் பகுதியை ஆள் நடமாட்டம் குறித்து
 டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுதல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில்
ஒரு சிலர் அரசு உத்தரவை மதிக்காமல் வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள துறையூர் வனசரக பகுதிக்கு உட்பட்ட வீரமஞ்சம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.
இதற்கு சிலர் அப்பகுதியில் சிகரெட் புகைத்து அப்படியே விட்டுச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வன பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்து டிரோன்  கேமிரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் முசிறி காவல் சரக  டிஎஸ்பி தலைமையில் வனபகுதியில் ஆட்கள்  நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது. அரசின் உத்தரவை மீறி வன பகுதியில் யாரேனும் சுற்றி வருவது டிரோன் கேமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

0 comments: