Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் என்.சி.சி மாணவர்கள் -சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறியில் 144 தடை உத்தரவில் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவியாக முசிறி அரசுக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் களமிறங்கி உள்ள சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் முசிறி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் சீருடைஅணிந்து உழவர்சந்தை, முசிறி கைகாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினர். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், சமூகஇடைவெளியை பின்பற்றுமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பலரும் உயிர்பயத்தில் உறைந்துள்ள நிலையில் என்.சி.சி மாணவர்கள் சமூகநல ஆர்வத்துடன் பணியாற்றியது சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

0 comments: