Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
  திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
   திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

0 comments: