Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    

திருச்சி ஏப் 12





திருச்சி சுப்பிரமணியபுரம்  பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகளின் தந்தை டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார்.  கடந்த10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்  திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவி  தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள  தாயார் வீட்டுக்கு வந்தார். கீழபுதூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு அந்த வீட்டில் மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து ,12 நபர்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று காலை  தாயும், குழந்தையையும் மருத்துவ குழுவின் 108 ஆம்புலென்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.

0 comments: