Monday, April 13, 2020

On Monday, April 13, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மதுவை தரையில் ஊற்றுவது போல் நாடகமாடி

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் ஊற்றி புதருக்குள் மறைத்த காவலர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில்களை திறந்து மதுவை கீழே ஊற்றி விட்டனர். ஆனால் அந்த பணிகள் எல்லாம் முடித்து சென்று விட்ட பின்னர் அங்குள்ள புதர் போன்ற பகுதியில் சில மதுபாட்டில்கள் அப்படியே ஒரு சிறிய சாக்கில் இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலிலும் முழுவதுமாக மதுவை நிரப்பி புதருக்குள் மறைத்தும் சாக்குப் பைகளில் முழு பாட்டிலை வைத்து இருந்தது தெரியவந்தது

பின்னர் இதுதொடர்பாக தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று அதை காட்சிகளாக பதிவு செய்வது பற்றி தகவல் அறிந்த போலீசார் மீண்டும் வந்து அந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது அந்த மதுபாட்டில்களை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றதாக கூறினர். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முழுவதுமாக மது நிரப்பப்ட்டது எப்படி என்று போலீசாரிடம் கேட்ட போது அதற்கான பதிலை தர மழுப்பி விட்டனர்.

 இதனால் ஒதுக்கி பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களின் ரகசியத்தை அறிய காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.


இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல்
அவரது வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் (மயிர புடுங்கி வந்தீங்களா) என்று
திட்டி விரட்டி உள்ளார் ஆகையால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: