Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

*சமயபுரம் கோவிலில் தமிழக அரசு ஆணையை மீறி உள்ளே நுழைந்து தரிசனம்*

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் ஆலய தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலும் கடந்த 20.3.2020 முதல் பக்தர்களின் தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவும் கொரோனா தாக்கத்தினால் ரத்து செய்யப்பட்டது.


 இந்நிலையில் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் கடந்த 4.4.2020 சனிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5.30 மணிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் சிறப்பு பூஜைகளும் மின்சாதனம் தொடர்புடைய பெண் தொழிலதிபரும் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் என்பவரின் மனைவியும் அரசின் உத்தரவை மதிக்காமல் தடையை மீறி திருக்கோவில் உள்ளே நடைபெற்ற பூஜைகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது,

 சமயபுரம் சுறியுள்ள  கிராமத்தினரும், உள்ளூர் ஆன்மீகவாதிகளும் மிகுந்த வேதனையும் பெரும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பூஜையில் கலந்து கொண்ட அன்று திருக்கோவிலில் உள்ள தனியார் முதன்மை காவலர்களும் கோவில் அர்ச்சகர்களும் எவ்வளவு தடுத்தும் கூட கோவில் உதவி கண்காணிப்பாளர் பழனிவேல் அவர்கள் அனைவரையும் மிரட்டி தகாத வார்த்தைகள் கூறி திருக்கோயிலின் பின்வாசல் வழியாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருக்கோவிலில் உள்ள பின்வாசல் கண்காணிப்பு கேமரா மற்றும் ஆலய கருவறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வீடியோ பதிவுகளை ஆராய்ந்தால் உண்மை தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

திருக்கோவிலில் நடந்த இத்தகைய சம்பவங்கள் பற்றி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் அவர்களுக்கும்  தெரியும் எனவும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

 அரசின் உத்தரவை மதிக்காமல் தனிநபரின் விருப்பத்தின் பேரில் ஆலய விதிகளை மீறி செயல்பட்ட சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உதவி கண்காணிப்பாளர்  பழனிவேல் அவர்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

0 comments: