Monday, April 20, 2020

On Monday, April 20, 2020 by Tamilnewstv in    

                     

திருச்சி கொரோனா தொற்று பாதிப்பினால் இறந்த மருத்துவர்களை பொதுமக்கள்  யாரும் இழிவு செய்ய வேண்டாம் திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி

                         


திருச்சி மகப்பேறு மருத்துவர் ரொஹையா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர் மனவேதனையுடன் கூறியபொழுது
கொரானா தொற்று என்பது ஒரு போராக நடந்து வருகிறது.

மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள் அது எங்களுக்கு தேவை இல்லை ஒவ்வொரு மனிதனும் நாம் இறக்கும் பொழுது இறுதியாத்திரை அவர்களுடைய மத சடங்குகள் படி நடக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் நேற்று நரம்பியல் நிபுணர் ஒருவர் இறந்தார் அவர் பல விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி உள்ளார். ஒரு நபர் ஏதோ ஒரு விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்ததில்  கொரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளது அந்த பாதிப்பினால் நரம்பியல் மருத்துவர் இறந்து போனார் .

அவரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் பொதுமக்கள் கூடி அவரை புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கொண்டுபோன அமரர் ஊர்தியை அடித்து உடைத்துள்ளனர்.ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துள்ளனர் இப்படியெல்லாம் செய்வது நீங்கள் மருத்துவருக்கு செய்யக்கூடிய மரியாதையா நீங்கதான் எங்களை காப்பாற்ற கூடியவர் நீங்கள் தான் கடவுள் போன்றவர் என்று கூறும் மக்கள் இப்படி ஒரு மருத்துவரின் இறுதி சடங்கில் இப்படிப்பட்ட செயல்கள் செய்துள்ளது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நானும் கடந்த மாதம் ஏழு பிரசவங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் ஒருவேளை அதைப் போன்ற தொற்று என்னையும் பாதித்தால் எனக்கும் இந்த நிலை தானே இது எல்லாம் நினைக்கும் பொழுது மருத்துவர்கள் வேலைக்கு வருவது பற்றி யோசித்தால் மக்களின் நிலை என்ன ஆவது?

மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவது மிகவும் கவலை அளித்து வருகிறது.

இதுநாள் வரை 12  மருத்துவர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கும்போது எங்களுக்கும் இந்த பாதிப்பு வரும் என்பது எங்களுக்கு தெரியும்,
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்கள் மேற்கொள்ளும் பொழுது நாங்கள் மருத்துவமனைக்கு வர மாட்டோம் என்று மருத்துவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்களின் நிலை என்ன
மருத்துவர் இறந்துவிட்டால் அவரை மயானத்தில் இறுதி சடங்கு செய்ய பொதுமக்கள் அனுமதி அளியுங்கள் 
அவரவர்கள் மதத்தின் படி இறுதி சடங்குகள் மேற்கொள்ள வழிவிடுங்கள் மருத்துவர்கள் நாங்கள் எதற்கு என்று ஒதுங்கிக் கொண்டாள் மக்களின் நிலை மிகவும் மோசம் அடையும் அதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் மருத்துவர்களின் இறப்பின் பொழுது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுமக்கள் யாரும் நடக்க வேண்டாம் என்று மருத்துவர் ரொஹையா மன வேதனையுடன் தெரிவித்தார்

0 comments: