Friday, April 10, 2020

On Friday, April 10, 2020 by Tamilnewstv in    
கொரோனா  வைரஸ் நோய்த் தாக்குதல் இந்தியாவிலும்   நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தான் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வகையில் திருச்சியில்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர துபாயில் இருந்து வந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஈரோடு இளைஞர் தற்போது பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

0 comments: