Friday, April 10, 2020

On Friday, April 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 09

அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட கடைகளை தவிர இதர கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.


கூலித் தொழிலாளர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 தற்போது ஊரடங்கு காரணமாக இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு தயிர் சாதம், எலுமிச்சை சாதம், வாழைப்பழம், முட்டை ஆகியவை இன்று முதல் திருச்சி அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது.
 திருச்சி இ.பி.ரோடில் மதுரம் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பலர் பயனடைந்தனர்.

0 comments: