Friday, April 10, 2020

On Friday, April 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 09

 திருச்சி  மாவட்ட அதிமுக சார்பில்
காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூலி தொழிலாளர்கள் பலர் அன்றாட வருவாய் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் நேதாஜி நகர் குடிசை பகுதி மக்களுக்கு வீடு வீடாக சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்த காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருவரம்பூர் கக்கன் காலனியிலும் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டது.

0 comments: