Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி அமைச்சர் வளர்மதி இலவசமாக முகக் கவசம் வழங்கினார்

திருச்சி



கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.



இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும்  ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் உள்ள வார்டுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் இருந்து பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

இந்நிகழ்வின்போதுபகுதிச் செயலாளர் டைமன்செயலாளர் டைமண்ட் திருப்பதி  அமைச்சர் நேர்முக உதவியாளர் முருகன் அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

0 comments: