Wednesday, April 01, 2020

On Wednesday, April 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 01


திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு -1000 நபர்கள் கைது -
10இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும்
கடைகள் - மாநகர காவல்துறை ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி
வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
கடந்த 24-ந்தேதி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை வாகனங்கள் மற்றும்
தனியார் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில்
சுற்றித்திரிந்ததற்காக திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 நபர்கள் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர்
மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,08,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி தேவையில்லாமல் வெளியே வருவதை
தவிர்க்கும்படியும், மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர
காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி
10இடங்களில்
(1.மதுரம் மைதானம், கீழப்புலிவார்டு ரோடு, 2. அண்ணா நகர் உழவர் சந்தை, தென்னூர், 3. அண்ணா
விளையாட்டரங்க முன்புறம், 4. கே.கே.நகர் உழவர் சந்தை, 5.மத்திய பேருந்து நிலையம், 6.எஸ்.ஐ.டி.
மைதானம், அரியமங்கலம், 7.பிஷப்ஹீபர் கல்லூரி மைதானம், புத்தூர், 8.சத்திரம் பேருந்து
நிலைய சுற்று வட்டாரப் பகுதி,
9.N.S.மேல்நிலைபள்ளி மற்றும் 10. ஸ்ரீரங்கம் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சில்லறை விற்பனை சந்தைகள் செயல்பட்டு
வருகிறது. மேற்படி இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி காவேரி பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல்
(02.04.2020) இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேற்கண்ட
இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.30
மணிவரை செயல்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறதுமேலும் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து,
தேவையற்ற பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையிலும் மாநகரில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.


0 comments: