Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி

அச்சகங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - பிரிண்டர்ஸ் அசோசியேஷன் கோரிக்கை

திருச்சி மாவட்ட பிரின்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் பிரசாத், செயலாளர் மோகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அறிவித்திருந்த 21  நாள் ஊரடங்கில் நாங்களும் பங்கேற்று, தற்போது வரை அச்சங்களை திறக்காமல் உள்ளம். ஊழியர்கள் பணிக்கு வராமல் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 திருச்சி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.
 அதில் பணியாற்றும் ஊழியர்கள் வருமானமின்றி பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.. அச்சகங்களில் ஊழியர்கள் தினக்கூலியாகவும், வார கூலியாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்புசாரா நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கியது போல் அச்சகங்களில் பணிபுரியும்  ஊழியர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அச்சகங்களுக்கு வாங்கப்பட்ட ஆர்டர்கள் வருடாந்திர வேலைகள் மற்றும் வரும் ஆண்டிற்கான பள்ளி, கல்லூரி பிரிண்டிங் ஆர்டர்கள் என அனைத்து பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
 அரசு சிறு குறு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் தடை நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் அச்சகம் செயல்பட ஆவணம் செய்ய வேண்டும். அச்சகங்களில் அரசு அறிவித்தபடி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன்  பணியாற்றுவோம் என்றனர்.


0 comments: