Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மணல் சரிந்து சம்பவ இடத்திலேயே பலி.


 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சின்னசேலம் பட்டியை சேர்ந்த தியாகராஜன் என்பவரது  விவசாய நிலத்தில்  ஆள் வைத்து பிரபு என்பவர் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு அந்நிலத்தில்  பொன்னம்பலம் பட்டியைச் சேர்ந்த   சிங்காரவேலன் என்பவரை  கொண்டு மணல் திருடும் பணியில் பிரபு ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மணல் சரிந்து அதில் சிக்கிய சிங்காரவேலன் சம்பவ இடத்திலேயே பலியானார். புதை மணலில் சிக்கி உயிரிழந்த சிங்காரவேலனின் பிரேத உடலை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அவருடைய வீட்டில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஜம்புநாதபுரம் போலீஸாருக்கு தகவல் தர சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்கள் வைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட பிரபு என்பவரை கைது செய்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

0 comments: