Saturday, April 18, 2020

On Saturday, April 18, 2020 by Tamilnewstv in    

முசிறி அருகே விழுப்புரத்திற்கு நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்.
 நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் விழுப்புரத்திற்கு நடந்து சென்றனர்.
இவர்களை கண்ட சமூக ஆர்வலர்கள் உணவு வாங்கிக் கொடுத்து விழுப்புரத்துக்கு அழைத்து சென்று உதவிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 விழுப்புரம் அருகே உள்ள திருக்கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (65) ,விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் மனைவி மற்றும் மகளுடன் நாமக்கல் மாவட்டம் ,பவுத்திரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் .தற்போது வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்  நல்லதம்பி வேலை வாய்ப்பின்றி சிரமப்பட்டு உள்ளார். போக்குவரத்து தடை செய்யபட்ட நிலையில் விழுப்புரம் அருகே உள்ள சொந்த ஊரான திருக்கோயிலூர் சென்றுவிட கூலித் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் நடை பயணமாகவே விழுப்புரத்திற்கு  செல்ல தீர்மானித்து பயணத்தை தொடங்கினர். சுமார் 150 கிலோ மீட்டர் நடை பயணத்திற்கு தயாரான தொழிலாளர்கள் மனதில் இருந்த நம்பிக்கை அளவிற்கு உடலில் தெம்பில்லாமல் மிகுந்த சோர்வுடன் திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டையில் நடந்து சென்றுள்ளனர். இவர்களை பார்த்த போலீசார் அதே பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் சமுக தொண்டு நிறுவணத்தின்  உதவியுடன் உணவு வாங்கிக் கொடுத்து ஆம்னி வேனை வாடகைக்கு எடுத்து விழுப்புரம் அருகே உள்ள திருக் கோவிலூர் கிராமத்தில் கொண்டு விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். கூலித் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நிலையில் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய தா.பேட்டை போலீசார் மற்றும் வாசவி கிளப் குழுவினர்களுக்கு கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

0 comments: