Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
திருச்சி

  கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகளாவிய பூட்டுதல் காரணமாக மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்டனர்.

 கொரோனா பாதிப்பினால் உலகளவில் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைத்துவிதமான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

 அதனால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த பலர் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதனால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்ப கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.இந்த வகையில் மலேசியாவிலிருந்து திருச்சி வந்த சுமார் 400 பயணிகள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

 இந்நிலையில் மலேசியாவில் தவித்துவந்த 177 தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அவர்களை அழைத்துவருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.அதன்படி மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, 177 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நேற்று (மே 9) இரவு 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. 

  திருச்சி வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இந்தப் பரிசோதனை பணியை நேரில் பார்வையிட்டார்.

 தவித்த 177 தமிழர்கள் திருச்சி வந்தடைந்தனர்அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே நகரத்திற்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு வந்த பயணிகளில் யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. 

 எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 40 நாள்களுக்கு மேலாக மலேசியாவில் தவித்துவந்த இவர்கள் தமிழ்நாடு திரும்பியிருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

0 comments: