Thursday, May 28, 2020

On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் ,
முசிறி அருகே தா.பேட்டைக்கு  மும்பையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

முசிறி தாலுகா தா.பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவர் கடந்த பத்து வருடங்களாக மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன் மும்பையில் வசித்த செந்தில்குமார்   மும்பையிலிருந்து விமானம் மற்றும் கார் மூலம் பயணித்து மனைவி தீபா மகன் கவின் அஸ்வின் ஆகியோருடன் தா.பேட்டைக்கு நேற்று  வந்துள்ளனர் . வரும் வழியில்

 இவர்களுக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை  முடிவில் தீபா, கவின் ,அஸ்வின் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தகவல் தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு கோவையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து தா.பேட்டை சேர்ந்த சுகாதார குழுவினர் மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் தா.பேட்டை முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: