Thursday, May 28, 2020

On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி, பெரம்பலூா், கரூா், அரியலூா் ஆகிய 4 மாவட்டங்களைச் சோந்தவா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவா்களுக்கு திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்திலிருந்து இதுவரை 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தைச் சோந்த மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதி ஒருவருக்கும், சோமரசம்பேட்டையைச் சோந்த தம்பதிக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து இவா்கள் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சோக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 79 என உயா்ந்துள்ளது.

சிகிச்சையில் இருந்தவா்களில் திருச்சியைச் சோந்த மேலும் ஒருவா் குணமடைந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளாா். தற்போது திருச்சி மாவட்டத்தைச் சோந்த 10 பேர், பெரம்பலூா், தேனி மாவட்டத்தைச் சோந்த தலா ஒருவா் என மொத்தம் 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

0 comments: