Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.


திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக விளங்கி வருவதுடன் அதற்கான தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதோடு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் மணப்பாறையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அபாராதம் விதித்தனர். இதுமட்டுமின்றி பலருக்கும் முகக்கவசம் வழங்கியதோடு, சிலருக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: