Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்த இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தி அசத்தும்  ஊராட்சி நடுநிலை பள்ளி.

ஆச்சரியத்துடன் பார்க்கும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள்.

              திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே ஆன்டிராய்டு செல்போன் மூலமாக  ஆன் லைன் வகுப்புகளை பள்ளித் தலைமையாசிரியர் நடத்தி வருகிறார்.

     எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயில்கின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகள் முழுவதும் தொடர் விடுமுறையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இப் பள்ளியில் கல்வி பயிலும் 6  வகுப்பில் 9 மாணவி, 7 மாணவர்களும்,  7 ம் வகுப்பில் 2 மாணவர்களும், 6  மாணவிகளும் என 22 மாணவ மாணவிகளுக்கு   பொது ஆங்கிலம், பொது கணிதம் ஆகிய பாடங்களை சென்னையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மீட் என்ற ஆப் மூலமாக மாணவ மாணவிகளின் அன்ராய்டு செல்போன் மூலமாக  இனையதளம் வழியாக ஆன் லைன் வகுப்புகளை கடந்த ஏப்ரல் 27 ம் தேதி முதல் தினசரி காலை  10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது.

         இந்த பாடங்களை பள்ளி ஆசிரியை ஒருவர் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஆசிரியர்கள் இருவர் நடத்துகின்றனர். இந்த ஆசிரிய ஆசிரியைகள் நடத்தும் பாடங்களை பள்ளித் தலைமையாசிரியர்  திருமாவளவன் தனது செல்போன் மூலமாக கண்காணித்து வருகிறார்.

      இது குறித்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறியதாவது ..

                          இந்த வகுப்புகளை  மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதனை  அவரது பெற்றோர்கள், கிராம மக்கள்  ஆச்சரியப்படும் வகையில் இவ் வகுப்புகள் அமைந்துள்ளதெனவும்,  விடுமுறை காலங்களில் செல்போன்களில் எந்நேரமும் விளையாடு பொழுதைக் கழித்த குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக கல்வி கற்றலுக்காக  பயன்படுத்துவதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது மாணவ மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்

0 comments: