Sunday, May 10, 2020

On Sunday, May 10, 2020 by Tamilnewstv in    
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்..

    திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் ஜி. கே தொழிற்பூங்கா வின் ஒரு பகுதியில் எவர்செண்டாய் கன்ஸ்ட்ரக்சன் பிரைவேட் லிமிடெட் இரும்பு தூண் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 1000 த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
  

 கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் கம்பெனியிலேயே தங்கியுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவை அரசு சற்று தளர்த்தியுள்ளதால், கம்பெனி மீண்டும் செயல்பட துவங்கியது.        
   

 ஆனால் பீகார், உத்திரபிரதேசம் , ஒரிசா,மகராஸ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலத்தினைச் சேர்ந்த 122 பேருக்கு தற்போது போதிய உணவு வழங்க வில்லையெனவும், வேலை பார்த்ததற்கு உரிய  சம்பளம் தரவில்லை எனவும், தற்போது தங்குவதற்கும் இடம் தர கம்பெனி நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் கூறினார்.
    

   இது தொடர்பாக கம்பெனி நிர்வாகம் மீது பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின. போரில் கம்பெனி அலுவர்களுடன் போலீஸார் பேசியதில் விரைவில் சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி் வருவதாகவும் , வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதால் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்ததால் வட மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் கம்பெனி வளாகத்திற்கு திரும்பிச் சென்றனர்.

0 comments: