Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
மணப்பாறை அருகே
மாட்டு வண்டியில் மணல் திருடி மலைபோல் வீட்டில் குவிப்பு.
2 பேரை கைது செய்த போலீசார். மணலை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள அரியாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக திருச்சி மத்திய மண்டல டி.ஜ.ஜி பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்று கொண்டிருந்தது. இதே போல் இன்றும்  மாட்டு வண்டிகளில் மணலை திருடிச் சென்று வீட்டில் குவித்து வைத்து விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் அரியாறு பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்று வீடுகளில் குவித்து வைப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன் மணல் திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 40, சித்தநாதன் வயது 29 ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரியா வயது 28 என்பதை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் மலைபோல் மணல் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மணப்பாறை வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு எடுத்து வந்து குவித்து வைத்துள்ளனர்.

0 comments: