Friday, May 15, 2020
On Friday, May 15, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன?
தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல்பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி திருச்சி, தஞ்சை, மதுரை போன்று பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு ஊர்களிலும் புகார்கள் மற்றும் பல வழக்குகள் (பணம் ஏமாற்றியதற்கு பல கோடி ரூபாய் பொதுமக்களுக்கு தரவேண்டும் என பணமோசடி வழக்கு) இதுநாள் வரை நிலுவையில் உள்ளது.
இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தங்கள் முறைகேடான முறையில் சம்பாதிப்பதை மறைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்ச ரூபாய் கொடுத்தனர்.
தற்போது இவர்களின் புதிய திட்டம், இவர்கள் ஆரம்பிக்கும் (?) அனைத்து விதமான தொழில்களிலும் 2000 பேர் மட்டும் ரூ.36,000கட்டி உறுப்பினராக சேர வேண்டும் (Share Holder) அவர்களுக்கு இவர்களின் நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தில் வாழ்நாள் ( யார் வாழ்நாள் முழுவதும் என தெரியவில்லை) முழுவதும் ஷேர் வழங்கப்படும் எனக்கூறி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதில் முதலில் பணம் தங்க மோதிரம் போன்ற பரிசுகள் வழங்க உள்ளதாக எல்பின் இயக்குனர் ராஜா அறிவித்துள்ளார்.
மேலும் இவர்கள் 5 லட்சம் கொடுத்தால் மூன்று வருடம் கழித்து 15லட்சம் ரூபாய், 10 லட்சம் கட்டினால் 30 லட்சம் ரூபாய் என்ற ஸிகீமில் வாங்கிய பல நூறு கோடிகளுக்கு காசோலைகள் இவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளனர் இந்த மூன்று வருட காலம் முடிவதற்கு சில நாட்கள் உள்ளன . இவர்கள் கொடுத்த காசோலைகள் தேதிகள் நெருங்கி வருகின்றன. பல நூறு கோடிகளுக்கு நிறுவனத்தில் பணம் உள்ளதா என்று கேட்டால் நகைப்பாக தான் உள்ளது. அத்தனை கோடிகளுக்கு காசோலை இவர்கள் கம்பெனி விதிமுறைப்படி கையில் கொடுத்து தான் பணத்தை வாங்க வேண்டும். வங்கியிலும் போட இயலாது எல்பின் கம்பெனி பொருளாதாரம் விழி பிதுங்கி உள்ளநிலையில் பல நபர்கள் இவர்களை விட்டு புத்திசாலித்தனமாக பணத்தை வசூல் செய்து கொண்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால் இவர்கள் தருவார்கள் என்று பலர் காசோலைகளை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு காசோலைகள் காலம் முடிவதற்கு முன் இவர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு கோடிகளுக்கு இவர்களிடம் எங்கு பணம் உள்ளது, என்று தெரியவில்லை. பல நூறு கோடிகள் இவர்களால் திருப்பி அவர்களுக்கு அளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா என்று கேள்வி எழுகிறது. பணத்தை கேட்க வந்தால் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே என்கிற ரமேஷ் குமார் பணத்தை பெற வரும் நபர்களை சந்திப்பது இல்லையாம். பணத்தை முதலீடு செய்ய வந்தால் உடனடியாக வந்து அவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என அவருடைய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் இவர்கள் தருவார்கள் என்று பலர் காசோலைகளை பத்திரமாக கையில் வைத்துக்கொண்டு காசோலைகள் காலம் முடிவதற்கு முன் இவர்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல நூறு கோடிகளுக்கு இவர்களிடம் எங்கு பணம் உள்ளது, என்று தெரியவில்லை. பல நூறு கோடிகள் இவர்களால் திருப்பி அவர்களுக்கு அளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் பணத்தை கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா என்று கேள்வி எழுகிறது. பணத்தை கேட்க வந்தால் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே என்கிற ரமேஷ் குமார் பணத்தை பெற வரும் நபர்களை சந்திப்பது இல்லையாம். பணத்தை முதலீடு செய்ய வந்தால் உடனடியாக வந்து அவர்களை சந்தித்து மூளைச்சலவை செய்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர் என அவருடைய வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இப்படி இந்தச் சூழ்நிலையில் எவருடைய பணத்தையோ வாங்கி இவர்கள் தானம் செய்து வருகிறோம் என்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இதில் நிறுவனத் தலைவர் ராஜா என்னும் அழகர்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் பேருக்கு நலத் திட்டங்கள் வழங்க உள்ளனராம்.
முதிர்வு காலம் முடிந்துவிட்டது பணம் கொடுங்கள் என்று காசோலை உடன் வந்து கேட்டால் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு செலவு செய்து விட்டோம் என கூறுவதற்காக இந்த நடிப்பா என தெரியவில்லை?
ஏதோ ஒரு பழமொழி சொல்வதுபோல இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.
முதிர்வு காலம் முடிந்துவிட்டது பணம் கொடுங்கள் என்று காசோலை உடன் வந்து கேட்டால் பிறந்தநாளுக்கு ஏழைகளுக்கு செலவு செய்து விட்டோம் என கூறுவதற்காக இந்த நடிப்பா என தெரியவில்லை?
ஏதோ ஒரு பழமொழி சொல்வதுபோல இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்நிலையில் இவர்கள் தமிழகம் முழுவதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதேபோன்று பல நூறு கோடிகள் செக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் டாக்டர் பட்டம் விலைக்கு வாங்கிக் கொண்டு தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் டாக்டர் என்று கூறுவது சட்டத்திற்குப் புறம்பாகவும் சட்டத்தை ஏமாற்றுவதாக உள்ளது. இதற்கும் கூடிய விரைவில் முடிவு தெரியும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் மதுரை மற்றும் தஞ்சையில் அதிகாரிகளை இவர்கள் யாரையும் விலைக்கு வாங்க முடியவில்லை, அதனால் அங்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதை போல் அனைத்து மாவட்டங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். விரைவில் இவர்கள் மீது அரசு சார்பில் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுத்து பொது மக்கள் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு உள்ளது.
(மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றுவது எப்படி)
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)
இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தில் மட்டுமின்றி பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பல உண்மை தகவல்கள் மற்றும் ஆதாரங்களுடன் விரைவில் சந்திப்போம்.......
பொது மக்களை பாதுகாப்போம்........
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment