Friday, May 15, 2020

On Friday, May 15, 2020 by Tamilnewstv in ,    
ரூ.20 லட்சம் கோடி உதவியில் 85 கோடி விவசாயிகளுக்கு எந்த உதவியும் (பலனும்) கிடையாது விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு
                

     இந்திய மக்கள்தொகையில் சுமார் 130 கோடியில் விவசாயிகள் 85 கோடி பேர் உள்ளனர். இவர்கள் கொரோனா ஊராடங்கள் பாதிக்கப்பட்டது கொஞ்சம், நஞ்சமில்ல, வேலை இல்லை, கூலி, சம்பளம் கிடைக்க இல்லை என்பது நிதர்சன உண்மை. அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது தான்.
     ஆனால், கடன் வாங்கி சாகுபடி செய்த வாழைவிவசாயிகள் வாழைதார்களை வெளியே கொண்டுசென்று விற்பனை செய்ய முடியவில்லை. ஏக்கருக்கு 1 லட்சம் முதல் 1.5 இலட்சம் வரை கடன் வாங்கி செலவு செய்து உள்ளார்கள். அத்துடன் சூறாவளி காற்றினால் வாழை மரம் எல்லாம் முறிந்து விழுந்துவிட்டது.
     வெற்றிலை பயிர் விவசாயம் செய்த விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து வெற்றிலை பறித்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தில் உள்ளார்கள். இதனால் வெற்றிலை எல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது.
      பூக்கள் வாங்க ஆட்கள் இல்லாததாலும், விற்பனை கடைகள் இல்லாததாலும், பூக்களை செடியில் பறிக்க ஆட்கள் இல்லாததாலும் பூக்கள் செடியிலேயே காய்ந்து உதிர்ந்து கொட்டிவிட்டது.
      தர்பூசணி, முலாம், திராட்சை பழங்களை கொண்டு சென்று விற்க முடியாததால் வயலிலேயே அழுகி அழிந்துவிட்டது.
      எலுமிச்சை பழம் விற்க வெளியே கொண்டு செல்ல முடியாமல் மரத்திலேயே பழுத்து கொட்டி அழுவிவிட்டது.
      நெல் சாகுபடி செய்த விவசாயிகளின் நிலையோ மிக மிக பரிதாபம், வெளி சந்தையில் நெல்லை விற்க முடியாததால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று நெல்லை விற்றத்தில் 40 கிலோ நெல் மூட்டை ஒன்றிக்கு ரூ.60 முதல் 80 வரை கமிஷன் எடுத்ததால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு கொடுத்த கமிஷன்(லஞ்சம்) தொகை சுமார் ரூ.281 கோடி, விவசாயிகள் வாழ்வதா..? சாவதா..?  DPC - நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்த இலட்ச கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைத்து அழிந்துவிட்டது.
     முதலீடு செய்த பணம்  எல்லாம் கைக்கு கிடைக்காமல் அழிந்துவிட்டது.
     இதனால் மத்திய அரசு ரூ.20 இலட்சம் கோடிகள் உதவித்தொகையில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000/- கொடுக்கும் என்று எதிர்பாத்தோம், விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம்.
     கொரோனா பாதித்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விவசாயிகள் 63 லட்சம் பேர் வங்கிகளுக்கு சென்று ரூ.86,600 கோடிகள் கடன் பெற்றார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்களே நியாயமா..?
     ஜூஸ் கரும்பு உற்பத்தி செய்த விவசாயிகள் ஜூஸ் கடைகள் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் கரும்பெல்லாம் வயலிலேயே காய்ந்துவிட்டது. விசேஷங்கள் இல்லாததால் வாழை இலைகள் கிழிந்தும், காய்ந்ததும் விட்டது. வெள்ளரிக்காய் பறித்து விற்க முடியாமல் அழிந்து வீணாகி விட்டது.
     தொழில்சாலைகள் இயங்காததால் மரவள்ளி(குச்சிவள்ளி) கிழங்குகள் வயளிலேயே அழிந்துவிட்டது.
     மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் இல்லாததால், மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திலும், மாண்புமிகு உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளத்தில் நஷ்டஈடும், கொரோனா தொற்றில் அழிவதைவிட, அதிகமாக விவசாயிகள் கடனில் அழிந்துவிடுவார்கள்,போராட அனுமதி கொடுங்கள் என்று நீதி மன்றத்தில் நீதி கேட்க உள்ளோம் என்று இவ்வாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார்.

0 comments: