Tuesday, May 19, 2020

On Tuesday, May 19, 2020 by Tamilnewstv in    
திருச்சி மே 18

மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி 
20இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது - விவசாயிகள்  கோவனதுடன் அறை நிர்வாணத்துடன் ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அய்யாக்கண்ணு  தலைமையிலும், திருச்சி மாநகர தலைவர் மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்  கோவணம் கட்டிக்கொண்டு,
அறை நிர்வாணத்துடன் 
ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அதில் இந்திய ஜனத்தொகை130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்.

பிரதமர் மோடி கொரோனா-வால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் என்றும் கூறினீர்கள். ஆனால் 40கிலோ நெல்லுக்கு 
ரூ.60முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், 
கிடைக்கவில்லை.
நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 இலட்சம் கோடி  நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும் என தான் உள்ளது.
விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லை.
வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும் 
எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எல்லோரையும் காப்பாற்றுங்கள்.
எனவே, நிதியமைச்சர்  விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கும்வரை, அதுவரை கடன் தள்ளுபடியும், ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்டஈடும்
60வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும் அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல் மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸ்-ம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அய்யாக்கண்ணு,
மாநில தலைவர்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்.

0 comments: