Monday, June 01, 2020

On Monday, June 01, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து  36 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா  தடை உத்தரவு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. 

 இதையடுத்து இன்று முதல் பேருந்துகள் இயக்க படலாம் என தமிழக அரசு  அனுமதி வழங்கியது. இதையடுத்து திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள  தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 28 புறநகர் பேருந்துகளும் 8 நகரப் பேருந்துகளும்  இயக்கப்பட்டன. பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கையுறை மற்றும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டனர். மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சனிடைசர்  வழங்கப்பட்டது. ஒவ்வொரு பேருந்தும் பேருந்து நிலையம் வரும் பொழுது கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு இயக்கப்பட்டன. இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் குறைவாகவே காணப்பட்டனர். நாளடைவில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும்  துறையூர் பகுதிகளில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.

0 comments: