Showing posts with label திருவாரூர். Show all posts
Showing posts with label திருவாரூர். Show all posts

Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ஜெ., தீர்ப்பை கண்டித்து முழு அளவிலான கடையடைப்பு நடந்தது. நீடாமங்கலம், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை, வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாரூரில் கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம், திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. இதில் வீடுகளில் உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டர்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கியாஸ் சிலிண்டர்கள் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று கியாஸ் ஏஜென்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என போலீசாரிடம் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர் வரதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

30-ந் தேதிக்குள்....

இணையதளத்தில் கியாஸ் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறை சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மேலும் சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. பதிவு செய்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சிலிண்டர் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதற்குள் சிலிண்டர்களை வினியோகம் செய்யாவிட்டால் மீண்டும் கியாஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கள்ளிக்குடியில் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதத்தை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.

கலவை சாதம்

திருவாரூர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புதிய வகை கலவை சாதங்கள், மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 வயது முதல் 5 வயது வரையிலான முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் காப்புறுதி திட்டம், மாற்று வழி புதுமை கல்வி போதனை மையங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை காய்கறி பிரியாணி, மிளகு தூள் முட்டை வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கொண்டை கடலை புலாவு, தக்காளி மசாலா முட்டையும், புதன்கிழமை தக்காளி சாதம்- மிளகு தூள் முட்டையும், வியாழக்கிழமை சாம்பார் சாதம்- சாதா முட்டையும், வெள்ளிக்கிழமை கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை உள்பட 13 வகையான உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நோக்கம்

பள்ளிச்செல்லும் குழந்தைகள் இடையில் படிப்பை நிறுத்தாமல் இருப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சத்தாண உணவை வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்தை அளித்தல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தினசரி வருகையை அதிகரித்தல் ஆகியை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் உதவி கலெக்டர் பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மீனாட்சிசுந்தரம், உதவி கணக்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் ரவிச்சந்திரன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன், தாசில்தார் நாகராஜன், சத்துணவு திட்ட உதவி கணக்கு அதிகாரி வெங்கட்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.